ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம், ஆனால்.. அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க்!

232

 

அரசு மற்றும் வணிக பயனர்கள் ட்விட்டரை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என எலான் மஸ்க் அதிர்ச்சி அளித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் டொலருக்கு சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை வாங்கினார். ஆனால் ட்விட்டரை இனி பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருக்குமா என பயனர்கள் சந்தேகித்தனர்.

மேலும், பயனர்கள் இலவசமாக ட்விட்டரை பயன்படுத்த முடியுமா என எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், ‘சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் ட்விட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படலாம்’ என தெரிவித்துள்ளார்.

அவரது இந்த பதிவு பயனர்களில் ஒரு தரப்பினருக்கு அதிர்ச்சியையும், மற்றோரு தரப்பினருக்கு ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

SHARE