தகவல்களை திருடி விற்ற ஹேக்கர்

127

ஆஸ்திரேலியாவில் ஹேக்கர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆஸ்திரேலியா நாட்டு மக்களின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார் என ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அல்பைன் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், கைது செய்யப்பட்டிருக்கும் ஹேக்கர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரேலிய மக்களின் தரவுகளைள விற்பனை செய்துள்ளார். அதில் அவர் விற்பனை செய்த தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளன. இந்த தரவுகள் ஆஸ்திரேலியாவின் 9 மில்லியன் மக்கள் தொகையை கொண்டதாக இருக்கிறது. அந்த நபர் இத்தகைய தரவுகளை இத்தாலி, நெதர்லாந்து, கொலம்பியா போன்ற நாடுகளில் விற்பனை செய்துள்ளார். தரவுகள் அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கப் பெற்றதால், அதன் மூலம் குற்றவாளிகள் பலர் மிரட்டி பணம் பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விற்கப்பட்ட தரவுகள் ஆஸ்திரேலிய மக்கள் தாங்கள் இருப்பிடம் குறித்த தகவல்களை காவல்துறையினருக்கு அளித்த பட்டியல் எனவும் சொல்லப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபர் சர்வதேச குற்றவாளி எனவும், அவர் ஏற்கனவே நெதர்லாந்து போலீசாரிடம் சிக்கி விசாரிக்கப்பட்டவர் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

maalaimalar

SHARE