‘தபங்’ திரைப்பட பாகம் 3 தயாராகியுள்ளது

133

ஹிந்தி மொழியில் வெளியான ‘தபங்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் மூன்றாம் பாகம் தயாராகியுள்ளது.

இதன் இரண்டு பாகங்களும் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளமையால் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் ‘தபங் 3’ திரைப்படம் உருவாகியுள்ளது.

‘Wanted’ திரைப்படத்திற்கு பின் 10 ஆண்டுகள் கழித்து சல்மான் கான் மற்றும் பிரபுதேவா கூட்டணி அமைந்துள்ளது. ‘தபங்’ வெளியீட்டின் மூன்றாம் பாகமாக இப்படத்தை, சல்மான் கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் தயாரித்து வருகிறார்.

இதில் பிரபுதேவா இயக்கத்தில் ‘சுல்புல் பாண்டே’ என்ற கதாபாத்திரத்தில் சல்மான் நடித்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து மொழிகளையும் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகின்றது.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் தமிழ் புரொமோ காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஜல்லிக்கட்டு காளை ரெடி’ என்பதை சல்மான் கான் தனது சொந்த குரலில் பேசியுள்ளார். ‘தபங் 3’ திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சோனாக்ஷி சின்ஹா, அர்பாஸ் கான், மஹி கில், கிச்சா சுதீப் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா என 4 மொழிகளில் வரும் டிசம்பர் 20ஆம் வெளியாகவுள்ளது.

SHARE