தலிபான் படைகளுடன் தமிழ்ஈழவிடுதலைப்புலிகள் அமெரிக்கப்படைகள் வெளியேற்றமும் தலிபான்களின் வெற்றியும்:

610

 

Taliban-seize-Afghanistan-unopposed--US-troops-withdraw

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பின்றி கைப்பற்றிய தலிபான்கள் இன்று காபூலையும் தன்வசம் கொண்டுவந்தனர். இதனால் தற்போது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் அதிகாரத்தையும் தலிபான் அமைப்பு கைப்பற்றியுள்ளது.

எதிர்ப்பே இல்லாது தலிபான் வசமான ஆப்கன்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்த பின்னர், தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் எந்தவித எதிர்ப்புமின்றி கைப்பற்ற தொடங்கினார்கள். ஆப்கனில் தலிபான்களுக்கு சவாலான நகரமாக இருந்த மசர் இ ஷரீஃபையும் நேற்று அவர்கள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும் எந்த எதிர்ப்புமின்றி இன்று தனது  கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் தலிபான்கள்.

தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கன் அரசு, தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கான பணிகளை செய்து வருவதாகவும் தெரிகிறது.

image

ஆப்கானிஸ்தானில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், மக்களை காக்கவும் அரசுப்படைகளுக்கு தற்போதைய அதிபர் அஷ்ரப் கனி அறிவுத்தியிருக்கிறார். அடுத்ததாக தலிபான்கள் தரப்பில் யார் ஆட்சி தலைமை பெறுப்பேற்பார் என்பது தொடர்பான ஆலோசனைகளை தலிபான் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், காபூலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலமாக நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்கள் அதிகாரிகள் மற்றும் மக்களை ஆப்கனிலிருந்து பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கைகளை செய்துவருகின்றன.

அமெரிக்கப்படைகள் வெளியேற்றமும் – தலிபான்களின் வெற்றியும்:

ஆப்கானிஸ்தானை தலிபான் படைகள் கைப்பற்றியுள்ள சூழலில் , ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகளை பத்திரமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜோ பைடன் மேற்கொண்டுள்ளார்.

image

இதுகுறித்து தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் கலந்தாலோசித்த ஜோ பைடன், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படையினர், அமெரிக்கா படையில் பணியாற்றிய ஆப்கன் மக்கள், தூதரக அதிகாரிகள் என 30 ஆயிரம் பேரை பாதுகாப்பாக நாட்டிலிருந்து வெளியேற்ற 5,000 அமெரிக்க வீரர்கள் அனுப்பவுள்ளதாக தெரிவித்தார், ஏற்கனவே 3,000 பேரை அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில் தற்போது எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தலிபான்களை எச்சரித்த பைடன், “அமெரிக்க பணியாளர்களையோ அல்லது எங்கள் பணிகளையோ ஆபத்தில் ஆழ்த்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தலிபான்கள் செய்தால், அமெரிக்கா அழுத்தமான இராணுவப் பதிலடியை கொடுக்கும்” என தெரிவித்தார். அமெரிக்க வீரர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் அமெரிக்கப் படைகளுக்காக பணியாற்றிய ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 30ஆயிரம் பேரை ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்க இராணுவ வீரர்களை காபூலுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவதற்கான பைடனின் முடிவு, கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால்  வேறு வழியில்லை என்று கூறிய பைடன், முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆப்கானிஸ்தான் கொள்கை மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

image

இது தொடர்பாக பேசிய பைடன், ” எனக்கு முன் இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று எங்கள் படைகள் மற்றும் நமது கூட்டாளிகளின் படைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒப்பந்தத்தை பின்பற்றுவது அல்லது நமது இருப்பை அதிகரித்து மற்றொரு நாட்டின் உள்நாட்டு மோதலில் மீண்டும் போராட அதிக அமெரிக்க துருப்புக்களை அனுப்புவது ஆகும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை போராடவைக்கும் நான்காவது ஜனாதிபதியாக நான் உள்ளேன். 5வது ஜனாதிபதிக்கும் இதை கடத்தமாட்டேன்” என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின்னர், தலிபான்கள் வேகவேகமாக அனைத்து நகரங்களையும் கைப்பற்ற தொடங்கினார்கள் பெரும்பாலான நகரங்களில் ஆப்கனின் அரசுப்படைகள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் தலிபான்களிடம் சரணடைந்தனர், அரசுப்படைகளின் ஆயுதங்களையும் பலர் தலிபான்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

image

இது தொடர்பாக ஜோ பைடனை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தொடர்ந்து கைப்பற்றிவருவதால், பைடன் ஆப்கானிஸ்தான் கொள்கையில் தோல்வியடைந்துள்ளார். தாலிபான்களுக்கு இனி அமெரிக்கா, அல்லது அமெரிக்காவின் சக்தி மீது பயமோ மரியாதையோ இருக்காது. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தலிபான்கள் தங்கள் கொடியை உயர்த்தும்போது அது எவ்வளவு அவமானமாக இருக்கும். இது பலவீனம், இயலாமை மற்றும் முழுமையான தோல்வி” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் என்ன?

அமெரிக்கப்படைகள், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற எடுத்த முடிவு தலிபான்களுக்கு சாதகமாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியுள்ளது தலிபான் படைகள். ஆப்கானிஸ்தானை ஏற்கனவே 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டுவரை தலிபான்கள் ஆட்சி செய்தனர். இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தலிபான்கள், ஆப்கானிஸ்தான் மட்டுமின்று மேற்கு பாகிஸ்தான் பகுதியிலும் வலுவான நிலையில் உள்ளனர்.

image

தலிபான்கள், ஆப்கானிஸ்தான் ஆட்சி பொறுப்பேற்றால் அவர்களின் வெளியுறவுக்கொள்கை என்னவாக இருக்கும்?, உலக நாடுகளுடனான தலிபான் அரசின் தொடர்பு எப்படி இருக்கும்?, ஐ.நா சபை இந்த ஆட்சியை அங்கீகரிக்குமா?, உலக நாடுகள் இந்த அரசை அங்கீகரிக்குமா? 20 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் சிதைந்த ஆப்கனின் பொருளாதாரம் என்னவாகும்? பெண்கல்வி எதிர்ப்பு உள்ளிட்ட அடிப்படைவாத கொள்கைகளை பின்பற்றும் தலிபான்களின் ஆட்சியின் மக்களின் நிலை என்னவாக இருக்கும்? ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் என்ன? என்பன போன்ற பல கேள்விகள் இப்போது எழ தொடங்கியுள்ளது.

SHARE