நடிகர் தனுஷ் நடிப்பில் ‘அசுரன்’ மற்றும் ‘பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் நிலையில், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் முதல்முறையாக இணையும் இந்த படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
மக்கள் திலகம் எம்.ஜிஆர், லதா நடிப்பில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் கடந்த 1973ஆம் ஆண்டு வெளியாகியது. எம.ஜி.ஆரின் திரையுலக வாழ்வில் அதிக வசூலை செய்து சாதனை செய்த படம் என்ற பெருமை இத்திரைப்படத்திற்கு உண்டு.
அந்தவகையில் இந்த தலைப்பு தனுஷ் படத்திற்கு வைக்கப்பட்டால், தலைப்பிவேயே படத்தின் வெற்றியை உறுதி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் காஸ்மோ வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.