தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன:-

255

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் குறித்த விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.

கொலை இடம்பெற்ற தினத்தில் நாரஹேன்பிட்டி காவல் நிலையப்பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் மொஹாம் மிஹிலால் தலைமையில் இன்றைய தினம் நடைபெற்ற விசாரணைகளின் போது இந்த விடயம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் கனடாவிற்கு சென்றுசீ.சீ.ரீ.வி காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
thajudeen_CI

SHARE