திருமண பந்தத்தில் இணைந்த கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்

115

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர்.

இதனிடையே இவர்கள் இருவருக்கும் வருகிற நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது. கவுதம் கார்த்திக்  – மஞ்சிமா மோகன் இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது கவுதம் கார்த்திக் வருகிற நவம்பர் 28-ஆம் திகதி எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணம் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும் படியாக நடக்கிறது.

திருமணத்துக்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை என்று திருமண தேதியை உறுதிப்படுத்தினார். கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் இந்நிலையில், கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE