தொடரும் அவலம் – யாழில் இளைஞர்கள் மீது மீண்டும் தாக்குதல்

198

யாழ்ப்பாணம் – ஆணைக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடாத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் மோட்டார் சைக்கிள்கள் சில சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆணைக்கோட்டை சக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன், காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் செல்வம் மற்றும் அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர், மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர்களை துரத்திச் சென்றுள்ளனர்.

இதன் போது இளைஞர்களை மடக்கிப் பிடித்து அவர்களை தாக்கியதுடன், அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர்களை தாக்கியவர்கள் கொச்சை தமிழில் பேசயதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5

 

 

SHARE