படையெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்!

190

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சற்று முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி முறைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NSBM என்ற தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்து வருவதாக எமது செய்தியாளர் கூறினார்.

மேலும், NSBM தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுமாறும், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை போன்று இந்த கல்லூரி இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கோசங்களை எழுப்பியும், பல பதாதைகளை ஏந்திய வண்ணமும் பேருந்து கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-17 625-0-560-320-160-600-053-800-668-160-90-18

 

SHARE