
உலகில் பட்டினியை ஒழித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 87ஆவது இடத்தை பிடித்துள்ளதாக “உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்” ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
118 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்துள்ள தெற்காசிய நாடுகளான இந்தியா 97ஆவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலகளாவிய ரீதியில் 29 சதவீதத்தால் பட்டினியர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் Rwanda, கம்போடியா மற்றும் மியன்மார் உள்ளிட்ட 20 நாடுகளின் பட்டினி ஒழிப்பு 50 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பட்டினி ஒழிப்பில் மத்திய ஆபிரிக்க குடியரசு,சாம்பியா,மடகஸ்கார்,யேமன் குடியரசு உள்ளிட்ட நாடுகள் இறுதி இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தென்னமெரிக்க நாடுகள் முதலிடத்தை வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.