பாகிஸ்தானை துவம்சம் செய்த மொயீன் அலியின் படை! அதிரடியில் மிரட்டிய இளம் வீரர்

133

 

கராச்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கராச்சியில் நேற்று நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடி காட்டிய தொடக்க வீரர் ரிஸ்வான் 46 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்கள் விளாசினார்.

கேப்டன் பாபர் அசாம் 24 பந்துகளில் 31 ஓட்டங்களும், இஃப்திகார் அகமது 17 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் 10 ஓட்டங்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டேவிட் மாலன் 20 ஓட்டங்களிலும், டக்கெட் 21 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் 40 பந்துகளில் 53 ஓட்டங்கள் விளாசினார். இறுதி கட்டத்தில் இளம் வீரர் ஹாரி புரூக் அதிரடியில் மிரட்டினார். அவரது அதிரடியால் இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஹாரி புரூக் 25 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் காதிர் 2 விக்கெட்டுகளையும், தஹானி மற்றும் ராஃப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

SHARE