பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்களின் போராட்டம் நிறைவு:

235

பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு கோரி பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்கள் நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்குவரத்து அமைச்சு வழங்கிய எழுத்து மூலம் வாக்குறுதியினை அடுத்தே, போராட்டம் கைவிடப்பட்டது.
அமைச்சர் துமிந்த திஸாயக்கவின் மத்தியஸ்தத்துடன், அநுராதபுரம் சிரேஸ்ட காவல்துறை அதிகாரி குறித்த கடிதத்தை தமது சங்கத்திடம் கையளித்ததாக, பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.டி பிரேமலால் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று அநுராதபுரம் – மதவாச்சி ரயில் பாதையை மறித்து போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்காரணமாக வடக்கு ரயில் பாதையின் தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டது.2138194240Fasting

SHARE