பார்வை குறைபாடு உடையவர்கள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!

138

 

பார்வை குறைபாடு உள்ளோருக்கான கிரிக்கெட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டெபன் நீரோ வரலாற்று சாதனை படைத்தார்.

பிரிஸ்பேனில் நியூசிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.

பார்வை குறைபாடு உள்ளோருக்கான இந்தப் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் ஸ்டெபன் நீரோ 140 பந்துகளில் 542 ஓட்டங்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்தார். இதில் ஒரு சிக்ஸர், 49 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த வகையிலான கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் ஸ்டெபன் நீரோ தான். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த போட்டியில், அவுஸ்திரேலிய அணி 40 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 542 குவித்து, நியூசிலாந்து அணியை 270 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த சாதனை குறித்து அவர் கூறும்போது ‘எந்தவொரு முழு பார்வையுள்ள கிரிக்கெட் வீரருக்கும் அந்த அளவு ஓவர்களுக்கு துடுப்பாட்டம் செய்வது கடினம். பார்வையற்ற கிரிக்கெட் வீரர்கள் கவனம் செலுத்த அதிக ஆற்றலைப் பயன்படுத்துகிறோம். இந்த சாதனை என்பதை நான் நாட்கள், வாரங்கள் செல்ல செல்ல தான் உணருவேன்’ என தெரிவித்துள்ளார்.

SHARE