பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் பவுண்ட் நோட்டுகள்!

114

 

20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகளை உபயோகிக்க நாளையே கடைசி நாளாகும். இதன்படி, செப்டம்பர் 30க்குப் பிறகு, 20 மற்றும் 50 பவுண்ட் அவற்றின் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தை இழந்து அவை மதிப்பற்றதாகிவிடும்.

பொருளாதார நிபுணர் ஆடம் ஸ்மித் இடம்பெற்றுள்ள காகித 20 பவுண்ட் நோட்டுகளும், தொழிலதிபர் மேத்யூ போல்டன் மற்றும் பொறியாளர் ஜேம்ஸ் வாட் ஆகியோரைக் காட்டும் 50 பவுண்ட் நோட்டுகளும் படிப்படியாக புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.

இதன்படி,20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகள் பாலிமர் பதிப்புகளால் மாற்றப்பட்டுள்ளன. பிப்ரவரி 2020 இல் முதன்முதலில் புழக்கத்திற்கு வந்த பாலிமர் 20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகளில் முறையே JMW Turner மற்றும் Bletchley Park codebreaker Alan Turing ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் மூலம் நோட்டுகளை கிழிப்பதற்கும், கள்ள நோட்டுகளை உருவாக்குவது கடினமாகவும் மாற்றப்பட்டது. 20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகளை உபயோகிக்க நாளையே கடைசி நாளாகும் என்பதால் இந்த வாரம் தபால் அலுவலகம் தனது கிளைகளில் வாடிக்கையாளர் குறித்த நோட்டுகளை வைப்பு செய்வதற்கு தயாராகி வருவதாகக் கூறியது.

மேலும், தற்போது வரை அதன் 11,500 கிளைகளில் 1.2 பில்லியன் பவுண்ட் காகித 20 மற்றும் 50 பவுண்ட் நோட்டுகள் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நோட்டுகளை இனி சட்டப்பூர்வமானதாக இருக்காது என்றாலும், மக்கள் தங்கள் தபால் அலுவலகம் மற்றும் பல இங்கிலாந்து வங்கிகளில் காகித நோட்டுகளை வைப்பு செய்ய முடியும் என அறிவிக்கப்படுகின்றது.

SHARE