புதினா பன்னீர் புலாவ் செய்வது எப்படி

547
சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி – 2 கப்

பன்னீர் – 200 கிராம்

புதினா – 1 கட்டு
கிராம்பு – 4
பட்டை – 1 இன்ச்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – 4 கப்

செய்முறை :

பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.

தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.
SHARE