புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட வேண்டும்: கோத்தபாய

273

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பதிலாக புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக வேண்டியதன் தேவை காணப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்களின் கட்சியொன்று உருவாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது எனவும் அவர் நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிட்கு வருகை தந்திருந் போது குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசு மக்களுக்கோ நாட்டுக்கோ ஒன்றும் செய்யவில்லை எனவும், பொலிஸ் இராஜ்ஜியம் ஒன்றையே உருவாக்கிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் தேவைக்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்,

இந்த அரசாங்கம் குற்றச் செயல்களை கண்டுபிடிப்பதை விடவும், அரசியல் பழிவாங்கல்களில் தீவிரம் காட்டிவருவதாகவும் இன்றைய நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் கண்டி விகாரையொன்றுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதியதொரு அரசியல் கட்சி ஒன்று உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE