இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரி வெளிநாட்டில் இருப்பதாக சுப்ரமணிய சுவாமி ஒரு ஊகத்திலேயே குறிப்பிட்டுள்ளார் என இலங்கையில் இருக்கக்கூடிய மூத்த சட்டத்தரணிகளுள் ஒருவரான தவராசா தெரிவித்துள்ளார்.
ரஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய அதி முக்கிய நபர் என்ற அடிப்படையில் சுப்ரமணியன் சுவாமி இதனைத் தெரிவித்திருந்தாலும் அவர் பெயர் குறிப்பிடவில்லை.
ஆனால், அவர் தெரிவித்துள்ள இந்த கருத்தின் அடிப்படையில் அவர் சுட்டிக்காட்டுவது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையே என ஊடகங்களின் பார்வையில் தெரிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, முன்னாள் பிரதமர் ரஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய நபர் வெளிநாடொன்றில் இருக்கின்றார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் சுட்டிக்காட்டுவது யாரை? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது, சுப்ரமணிய சுவாமியின் கருத்தின் அடிப்படையில் அவர் சுட்டிக்காட்டுவது பொட்டு அம்மானையே என இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சட்டத்தரணி தவராசா குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,