பேஸ்புக் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க புதிய முயற்சி – மனோ 

205

பேஸ்புக் மூலம் பல்வேறு கதைகளை பிரச்சாரம் செய்து சிலர் அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, அவர் வெளிநாடு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சில அமைச்சுக்களை தன்வசப்படுத்திக்கொண்டதையும் அமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார்.

தற்போது ஜனாதிபதியும் பிரதமரும், சபாநாயகரும் வெளிநாடு சென்றுள்ளனர். இந்த நிலையில், அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்குள் தள்ள சிலர் பேஷ்புக் மூலம் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

fd57893e38e20a534a95ea9fdd15cef5_xl

SHARE