பொதுமக்களுக்கு கனடா பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

148

 

கனடாவில் பாரிய தொகை போலி நாணய குற்றிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரண்டு கனடா டொலர் குற்றிகள் பத்தாயிரத்திற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ரோயல் கனேடியன் மவுண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மேலும் பல போலி நாணய குற்றிகள் புழகத்தில் இருக்கலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஒன்றாரியோவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் உள்ள தனித்துவமான அம்சங்கள், அவற்றை உலகில் மிகவும் பாதுகாப்பானவையாக மாற்றுகின்றன.

இந்த நிலையில் போலி நாணய குற்றிகளை அடையாளம் அவற்றை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக றோயல் கனடியன் நாணய நிறுவனத்தின் பாதுகாப்பு துணைத் தலைவர் ஜேம்ஸ் மலிசியா தெரிவித்துள்ளார்.

ரோயல் கனேடியன் மவுண்ட் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE