பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா

547

 

பொருளாதார ஏகாதிபத்திய வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனா

பொருளாதார ஏகாதிபத்தியம் : தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனாவின் திட்டம் இது தான்.பொருளாதார ஏகாதிபத்தியம் : தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி நாடுகளை அடிபணியச் செய்ய செய்யும் சீனாவின் திட்டம் இது தான்.!   இரண்டாம் உலகப் போர் முடிந்தது முதல்,யாரும் கண்டிராத கடும் சிக்கலை வுஹான் கொரனா வைரஸ் உலகம் மீது கட்டவிழ்த்துட்டுள்ளது. உலப்பொருளாதாரம் நலிவடைந்து கிடக்கிறது. மக்கள் இன்னும் பெரிய அளவில் பல நாடுகளில் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள். கொரானா வைரஸுடன் நாம் நெடுநாள் வாழ வேண்டியிருக்கும் என்ற உண்மையும் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்துள்ளது. இந்த ஆபத்தை உலகம் முழுதும் ஒன்றிணைந்து போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வாழ்க்கையின் சில அடிப்படை உண்மைகளை எல்லாரும் வெகு விரைவில் அறிந்து கொண்டார்கள்.காரணம், இந்தப் பேரழிவின் மையத்தில் சீனா உள்ளது. Also Read – ₹ 60,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள்- நீதிமன்ற உத்தரவால் மீட்க நடவடிக்கை! கொரானா வைரஸின் தீவிரத்தைக் குறித்து உலகத்துக்கு எச்சரிக்கை கொடுக்காமல், WHO வில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி நாடுகளை அக்கறையில்லாமல் இருக்க செய்து விட்டு, இப்போது தன்னுடைய பொருளாதார அசுர பலத்தை பயன்படுத்தி உலகத்தை அடிபணிய வைக்கப் பார்க்கிறது சீனா. உலகளாவிய அளவில் உற்பத்தித் தொழிற்சாலைகளின் மையமாக இருப்பதால் , அடுத்த நாடுகளின் மீது அதற்கு வலுவான பிடி உள்ளது. தான் நினைத்தால் அந்த நாடுகளின் பொருளாதாரத்தை முடக்க முடியம் என்றும் சீனாவுக்கு நன்றாகத் தெரியும். Also Read – கோவிட் பொருட்களுக்கான பொது கொள்முதல் விதிகளை எளிதாக்கியது மத்திய அரசாங்கம்! இதன் அடிப்படையில் தான் வுஹான் வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைத்த போது மருத்துவ விநியோகங்களை அமெரிக்காவிற்கு நிறுத்தி விடுவதாக சீனா மிரட்டியது. சீனா அப்படி நிஜமாகவே செய்திருந்தால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். அமெரிக்காவின் 95% anti biotics மருந்து சீனாவிலிருந்து வருகிறது. அமெரிக்க அதிபரும் வுஹான் வைரஸ் என்று அழைப்பதை வெகு விரைவில் நிறுத்தி விட்டார். இந்த வெற்றியின் மூலம் துணிவடைந்த சீனா மற்றவர்களையும் இப்போது மிரட்ட ஆரம்பித்திருக்கிறது.போன மாதம் நெதர்லாந்துக்கு மருத்துவ உதவிகளை நிறுத்தி விடுவித்தாக மிரட்டியது. தைவான ,முகக்கவசங்களை நெதெர்லாந்துக்கு அனுப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தைவானிலிருக்கும் தங்கள் தூதரகத்துக்கு ‘Netherlands office Taipei’ என்று பெயர் மாற்றினர். தங்களுடைய ‘ஒரே சீனா’ கொளகைக்கு இது பொருந்தாததால் சீனா கோபமடைந்தது . Also Read – ‘ஸ்ரீரங்கம் ஜீயரைத் தேர்ந்தெடுப்பதில் அரசு தலையிடக் கூடாது’- வைணவர்கள் கண்டனம்! இந்த வார தொடக்கத்தில், ஜப்பானிய கடலில் செங்காகு தீவுகளுக்கு அருகே சீன அரசாங்க கப்பல்கள் ஜப்பானிய மீன்பிடி படகுகளை துரத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக டோக்கியோ தனது எதிர்ப்பை சீனாவுக்கு பதிவு செய்தது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரேலியா திரும்பப் பெற மறுத்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய பார்லி மீது 80 சதவீத இறக்குமதி வரியை விதிக்க சீனா அச்சுறுத்தியதால் ஆஸ்திரேலியாவும் சீனாவின் கோபத்தை அனுபவிக்கக்கூடும். இவை அனைத்திற்கும் மேலாக, இரண்டு சீன ஊடகங்கள், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகியவை சீனாவின் ஒரு பகுதியாக இருந்தன என்றும் கஜகஸ்தானும் கூட “சீனாவுக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளன” என்றும் கூறியது. இந்த இரு நாடுகளும் சீனாவிடமிருந்து பெரும் நிதி முதலீடுகளைப் பெற்றுள்ளன, அவை கம்யூனிஸ்ட் ஆட்சியின் விரோதப் போக்குகளுக்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை. Also Read – PM-KISAN திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் 55 லட்ச விவசாயிகள் 985.61 கோடி பெற்றனர்! சீனாவின் இந்த திட்டம் , நிச்சயமாக, அமெரிக்கா பின்பற்றும் திட்டத்தை விட வேறுபட்டதல்ல. பிற நாடுகளின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கும், உலகெங்கிலும் அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் பெரிய பொருளாதார மற்றும் இராணுவ வலிமையின் ஆதரவோடு, ‘சிவில் சமூக அமைப்புகள்’ மற்றும் ‘மனித உரிமை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்’ ஆகியவற்றின் விரிவான வலையமைப்பைப் பயன்படுத்தி அதே நோக்கங்களை அடைய முயல்கிறது

சீனா. உலகம் இந்த கம்யூனிச ஆட்சியின் கீழ் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி, உலக விநியோக சங்கிலியில் (Global Supply Chain )ல் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பது தான். அதை அடைய பெரும் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் உலகம் சந்திக்க வேண்டியிருக்கும். சபீபத்தில் நடப்பதை வைத்துப் பார்த்தால்,மற்ற எல்லா நாடுகளையும் விட கொராணாவிற்கு பிறகு வலிமையான நாடாக சீனாவே உருவாகலாம். கொரானாவிற்குப் பிந்தைய உலகம் அமரிக்க மேலாதிக்கத்தை அடிப்டையாகக் கொண்டதாக இருக்காது என்பது தெளிவு.

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் இலங்கைக்கு அநீதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனா எமது வளங்களை மாத்திரம் அல்ல கிடைக்கும் வருமானத்தையும் அள்ளி செல்கின்றது. அரசாங்கம் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு முன்னர் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மை போன்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் அவ்வாறு செய்யாது மக்கள் மத்தியில் போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான காணி மதப்பீடு மிகவும் அநீதியான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெறுமதி மிக்க காணிகள் ஆக குறைந்த விலைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் 80 வீத பங்குகள் சீனாவிற்கும் 20 வீதமான பங்குகள் இலங்கைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிராகரிக்கும் வகையில் அரசாங்கம், 60 வீதமான பங்குகள் சீனாவிற்கும் 40 வீதமான பங்குகள் இலங்கைக்கும் என போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது. சீனாவுடனான ஒப்பந்த வரைபை இதுவரையில் அரசாங்கம் வெளியிடாதது ஏன் ? என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் உண்டு. அப்பாந்தோட்டை துறைமுகத்தின் மூன்றாம் கட்டம் 2ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஓப்பந்தத்தில் ஏற்கனவே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக 80 வீதமம் சீனாவிற்கும் 20 வீதம் இலங்கைக்கு எனும் போது, மூன்றாம் கட்ட பணிகளுக்கான 20 வீதத்தை அதாவது 400மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை வழங்க வேண்டியதுள்ளது. இந்த தொகையை செலுத்தா விட்டால் சீனாவின் 80 வீதமான பங்குகளில் அதிகரிப்பு நிலை ஏற்படும்.

ஒப்பந்தத்தில் காணப்படும் இந்த உண்மைகளை நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கூற வில்லை. மாறாக 10 வருடத்தில் 50 வீதமான பங்குகள் இலங்கைக்கு கிடைக்கும் என கூறி வருகின்றது. மேலும் அம்பாந்தோட்டை துறைமுக திட்டம் முழுமையடைந்து 6 மாதங்களின் பின்னர் சீனா சர்வதேச மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இலங்கையுடன் இலாப நட்டத்தை பகிரப்போகின்றது. ஆனால் தற்போது முன்னெடுக்கப்பட்ட அனைத்து மதிப்பீடுகளும் உள்ளக அளவுக்கோள்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சர்வதேச முதலீடுகளுக்காக ஒப்பந்தங்கள் மேகொள்ளும் போது விஞ்ஞான ரீதியில் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமானதாகும். 100 கிலோ மீற்றர் பரப்பிற்குள் வேறு துறைமுகசார் நடவடிக்கைகள் இடம்பெற கூடாது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சீனா வசமே காணப்படும் போன்ற விடயங்களை அரசாங்கம் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். தேசிய பாதுகாப்பிற்கு இது சவாலா விடயமாவே காணப்படும். அது மாத்திரமின்றி தென்னிந்திய கடலில் இலங்கைக்கு காணப்படும் சிறப்பின் அதிகாரம் சீனாவின் வசம் செல்லும் நிலையே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.

 

SHARE