மலையகத்தில் அறுபது வீதம் மக்கள் செல்வாக்கை கொண்டவர்கள் நாங்களே என மார்தட்டிக்கொள்பவர்கள் உடனடியாக தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை நடத்தி உரிய சம்பளத்தை பெற்றுகொடுக்கவேண்டும் அவ்வாறு முடியாவிட்டாள் பகிரங்கமாக அறிவிக்கட்டும் நாங்கள் சம்பள பிரச்சினையை தீர்த்து வைக்க தயார் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்
கொட்டகலை ரொசிட்ட தோட்டத்தில் 23 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்
நீண்ட காலமாக குடியிருப்பு பிரச்சினையை எதிர் நோக்கிய ரொசிட்ட தோட்ட.தில் பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் மலையக புதியகிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் நிதியெதுக்கீட்டில் தனி வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நா.டும் நிகழ்வு 07.08.2016 ஞாயிற்றுக்கீழமை நடைபெற்றது இந் நிகழ்வில்பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மாகான சபை உறுப்பினர்களான சேஸ்ரீதரன் சிங்பொண்ணையா ராஜாராம் மலையக மக்கள் முன்னனியில் செயலாளர் லோரண்ஸ் ட்ரஸ்ட்நிறுவனத் தலைவர் வீ புதௌதிரசிகாமனி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நமது மக்களை கடந்த காலத்தை போல ஏமாற்ற முடியாது மக்கள் பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேசாமல் மக்களிடம் அதிகமாக பேசி அரசியல்நடத்துபவன் நான் அல்ல நான் சேவை செய்பவன் சிலர் ஆயிரம் ரூபாய் சம்மளம் பெற்றுதருவதாக தேர்தல் காலத்தில் நாடகம் அடினார்கள் இப்போது தேயிலை விலையீல் வீழ்ச்சி ஆகவே இப்போது சம்பளம் உயர்வு கேட்டக முடியாது என்கிறார்கள் அன்று திகாம்பரத்தை தேர்தலில் தேற்கடிக்கவே ஆயிரம் ரூபாய் பெற்றுத் தருவதாக மேடையில் முழங்கினர் இப்போது தேயிலை விலை வீழ்ச்சி என்பவர்கள் அன்று தேயிலை விலை வீழ்சியில் இருந்ததை தெரிந்திருக்கவில்லை! இ’வர்களால் சம்பள பிரச்சினையைதீர்க்க முடியாவிட்டார் பகிரங்கமாக அறிவிக்கட்டும் நங்கள் தீர்த்து வைக்கின்றோம் அவ்வாறு இல்லாமல் அமைச்சர்களாக இருப்பவர்கள் மீது பழி சுமக்க முடியாது நாங்கள் கூறியது போல 2500ரூபாய் இடைக்கால கொடுபனவை பெற்றுக்கொடுத்துள்ளோம் இதை சம்பளத்தில் திருப்பி செலுத்த தேவையில்லை அடுத்த வருடத்தில் பத்தாயிரம் வீடுகளை அமைப்பத்தற்கான உறுதியை பிரதமர் எமக்கு வழங்கியுள்ளார் வேவன்ட தோட்ட மக்கள்! இவ்வளவு காலம் ஏமாந்து விட்டோம் என அழுதனர் அவர்களுக்கு அடுத்த வாரத்தில் 59 புதிய வீடுகளை அமைக்க அடிக்கல் நாட்டப்படும் நான் ராதாகிருஸ்னன் மனோகணோசன் ஆகியோர் சிறப்பாக ஒற்றுமையாக கூட்டமைப்பாக செயற்படுகின்றோம் நீங்களும் மக்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாளும் அவர்களுக்கு எமது அதரவு உண்டுஎனதெரிவித்தார்
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமந்திரன்