மன்னார் சாலை அதிகாரிகளின் அசமந்த போக்கு- பொதுமக்கள் விசனம்

113

 

அரச போக்குவரத்து சபையின் கீழ் மன்னார் சாலையில் இருந்து மடுக்கரை கிராமத்திற்கு செல்லும் பேருந்து சேவை சீரான முறையில் இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலையில் இருந்து ஒரு பேருந்து நாளாந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டு வந்துள்ளது.

மக்கள் விசனம்
அண்மைக்காலமாக மன்னாரில் இருந்து மடுக்கரை கிராமத்திற்கான அரச போக்குவரத்துச் சேவைகள் சீராக இடம் பொறாமையினால் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த போக்குவரத்துச் சேவைகள் சீரான முறையில் இடம் பொறாமையினால் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,பேருந்து தரிப்பிடத்தில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளின் அசமந்த போக்கு
குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான பருவகாலச் சீட்டு வழங்கப்பட்ட போதும் மாணவர்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் சாலை அதிகாரிகள் தொடர்ச்சியாக அசமந்த போக்குடன் நடந்து கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே குறித்த பகுதி மாணவர்கள் மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறித்த போக்குவரத்து சேவையை உரிய முறையில் மேற்கொள்ள மன்னார் சாலை அதிகாரிகள் முன் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE