-மன்னார் நிருபர்-
(24-09-2018)
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் சாதனைகளுக்கு முக்கியமாக அமைகின்றது எழிமையும், தன்னடக்கத்தையும் தங்களுக்குள்ளே வழி காட்டியாகக் கொண்டு நாங்கள் எந்த நேரத்திலும் எந்த வேளையிலும் தடுமாறவும் மாட்டோம், தடம் மாறவும் மாட்டோம் என்ற அந்த உயரிய சிந்தனையுடன் ஒவ்வொறு பாடசாலைகளையும் ஆசிரியர் , அதிபர்களாகிய நீங்கள் வழி நடத்தி வந்துள்ளீர்கள் என மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியன் தெரிவித்தார்.
மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் புரட்டாதி முழு நிலாக் கலை விழா நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் கலந்து கொண்டார்.
இதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
முன்னைய காலங்களில் இருந்த கலை நிகழ்வுகள் அருகிக் கொண்டு செல்கின்ற நிலையில் கலை நிகழ்வுகளை அடுத்த பரம்பரைக்கு கடத்தப்பட வேண்டும் என்பதற்காக இந்த புரட்டாதி முழு நிலாக் கலைவிழா வானது நடாத்தப்படுகின்றது.
எனினும் இம் முறை எனது ஓய்வு பெறும் காலத்தில் இறுதி கலை விழாவாக இன்றைய புரட்டாதி முழு நிலாக் கலைவிழா மன்னாரில் இடம் பெறுகின்றது.
ஒவ்வெரு வருடமும் இடம் பெறுகின்ற புரட்டாதி முழு நிலாக் கலைவிழா நிகழ்வானது எனது தலைமையிலே கூட்டம் நடாத்தப்பட்டு இடம் பெறுவது வழமை.
ஆனால் இம்முறை எனது தலைமை இல்லாமல் மன்னார் வலயக்கல்வி பணிமனை அலுவலகர்கள் நீங்கள் உணர்ந்து நல்ல முறையில் இவ் விழாவை சிறப்பாக நடாத்தியுள்ளீர்கள்.
அதற்கு நான் தனிப்பட்ட பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
-மன்னார் மாவட்டத்தில் புத்தி ஜீவிகளை உருவாக்கும் நீங்கள் நிச்சையமாக இந்த மாணவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள உயரிய சிந்தனை குறிப்பாக மாணவர்களின் நடத்தையில் இருந்து கல்வி மட்டும் மாணவர்களை உருவாக்குவதில்லை.
கல்வியோடு சேர்ந்து ஒழுக்கமும், ஞானமும் மாணவர்களுக்குள் இருக்கின்ற திறன் வெளிப்பாடும் தான் சமூகத்திலே அவர்களை நன் மதிப்புள்ளவர்களாக மாற்றுகின்றது என்பதனையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
-தொடர்ந்தும் எமது கல்வி வலயம் முதல் நிலையில் இருப்பதை நினைத்து மகிழ்வடைகின்றேன். என அவர் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, களைஞர் கௌரவிப்பு இடம் பெற்றது.இதன் போது மாணவர்கள், ஆசிரியர்கள் உங்பட நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












