மஹிந்த – மைத்திரியை இணைக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சி!

296

 

புதிய அரசியலமைப்பை எதிர்க்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அமைய உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமாயின் அதற்கு இடமளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் மஹிந்த மற்றும் மைத்திரி தரப்பை ஒன்றாக இணைக்க கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்கும் என மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE