மஹிந்த ராஜபக்ஷவிற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் – வவுனியா நகரசபை மைதானத்தில் அமைச்சர்.ரிஷாட் பதியுதீன் அவர்கள் ஆற்றிய உரை.

381

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினுடைய வவுனியா மாவட்ட அமைப்பாளரும்இ ஜனாதிபதியின் இணைப்பாளர் சுமதிபால அவர்களேஇ ஜனாதிபதியின் இணைப்பாளர் கிஷோர் அவர்களேஇ அமைச்சின் இணைப்புச்செயலாளர் ஜனாப்.முத்து முஹம்மட் அவர்களேஇ ஆளுநருடைய ஆணையாளர் ஜனாப்.முஹைதீன் அவர்களேஇ நகரசபை உறுப்பினர் பாரி அவர்களேஇ நலின்இ லலித் அவர்களேஇ பிரதேச சபை உறுப்பினர்களான சரூக் உட்பட ஜோர்ஜ் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்களேஇ ஹசன் அவர்களே இன்னும் இங்கு வருகை தந்திருக்கின்ற இணைப்பாளர்களான ஹாரிஸ் உட்பட ஏனைய இணைப்பாளர்களேஇ திட்டப் பணிப்பாளர்; உட்பட ஏனைய அதிகாரிகளேஇ கணக்காளர்களேஇ பிரதேச செயலாளர்களேஇ இன்னும் வருகை தந்திருக்கின்ற திணைக்களத் தலைவர்களே  இன்று இந்த மோட்டார் சைக்கிளைப் பெறுவதற்காக வருகை தந்திருக்கின்ற அரச உத்தியோகத்தர்களேஇ நண்பர்களேஇ சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் இறைவனுடைய சாந்தியும்இ சமாதானமும் உண்டாவதாக என்று பிரார்த்திக்கின்றோமாக.
நல்லதொரு நிகழ்வு. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற ஒரு நல்ல விடயத்தினை மேற்கொள்கின்ற இந்த நிகழ்வுக்காக நானும் எங்களுடன் இணைந்த அரசியல் பிரமுகர்களும் இணைந்து உங்களுக்கு மோட்டார் சைக்கிள்களைக் கையளிக்க வந்திருக்கின்றோம். 30 வருடகால யுத்தத்தினால் இந்த மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டமை உங்களுக்குத் தெரியும். அபிவிருத்தி என்று பார்க்கின்றபொழுது பாடசாலைஇ பாதைஇ மின்சாரம்இ வீடமைப்புத் திட்டம் இன்னோரன்ன குளங்கள் போன்ற பல வகையான அபிவிருத்தித் திட்டங்களை நான்கைந்து வருடகால சமாதான காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த அரசாங்கம்இ பசில் ராஜபக்ஷ அமைச்சருடைய ஒத்துழைப்புடன் பாரிய பல அபிவிருத்திகளை இந்த மாவட்டத்திலே நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.
அதனுடைய பலன்தான் இந்த நாட்டினுடைய பொருளாதாரத்துறைக்கு 11வீதமான பங்களிப்பை எங்களுடைய வவுனியா மாவட்டம் வழங்கியிருக்கின்றது. இந்த நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சி 8வீதமாக அல்லது 7.6 வீதமாக இருக்கின்றபொழுது வவுனியா மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சி 11 வீதத்தினையும் தாண்டியிருக்கின்றது. எனவே மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த இந்த மாவட்டம் இன்று பொருளாதார ரீதியாக நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற ஒரு மாவட்டமாக இன்று மாற்றமடைந்திருக்கின்றது. இதற்கான காரணம் இந்த மாவட்டத்திலே அரசாங்கம் முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான். கல்விஇ சுகாதாரம்இ விவசாயம் போன்ற ஏனைய துறைகளிலும் இந்த அரசாங்கம் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கின்றது.
இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவராக நாங்கள் இருந்து இந்துஇ கிறிஸ்தவம்இ முஸ்லீம்இ சிங்களம் என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல்இ கட்சி என்ற பேதமில்லாமல் நாங்கள் இந்த மாவட்டத்திலே வளர்ச்சிக்கான எங்களுடைய பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றோம். அந்த வகையிலே இந்த மோட்டார் வாகனங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. 06 மாதங்கள் தான் அரச வேலைகிடைத்து ஆனால் இன்று பயனாளிகளாக வந்திருக்கின்றார்கள் என்று அரச அதிபர் கூறினார். எனவே அவ்வாறானதொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. சிலர் 30 வருட அரச பணியில் இருந்தபோதும் இன்னும் சைக்கிளிலே சென்றுவந்த காலம் இருந்தது. ஒரு மோட்டார் வாகனம் வாங்கும் வசதியில்லாமல் எத்தனையோ அரச ஊழியர்கள் இருந்திருக்கின்றார்கள்.

SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES  SAMSUNG CAMERA PICTURES
ஆனால் ஒரே நாளில் இவ்வாறான மோட்டார் வாகனங்கள் மிகவும் குறைந்த விலையிலே வழங்கியிருப்பது உங்களுக்கு கிடைத்த பாக்கியமாகும். எனவே நன்றியுள்ள மக்களாக நாங்கள் இருக்க வேண்டும். எங்களிடத்திலே இன்று இல்லாத உணர்வுதான் நன்றியுணர்வு. நாங்கள் இன்று சாப்பிடுகின்றோம். ஒரு தொழிலைப் பெறுகின்றோம். அதனூடாக வாழ்கின்றோம் என்றால் அந்த தொழிலுக்கு உரிய மரியாதை செய்கின்ற தார்மீக பொறுப்பு இருக்கின்றது. எனவே நாங்கள் நன்றியுணர்வுள்ள ஒரு சமூகமாக இருக்கவேண்டும். அழிந்துவருகின்ற எங்களுடைய இந்த மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கு அரசிடத்திலே நாங்கள் பெற்றுவந்த பலம் இந்தப் பிரதேசத்திலே கட்டியெழுப்பிய கட்டடங்கள்இ இப்பிரதேசத்திலே இடம்பெற்றிருக்கின்ற அபிவிருத்திகள் இதற்குச் சான்றாகவிருக்கின்றது.
எனவே இவ்வாறான பல நல்ல அபிவிருத்தித் திட்டங்களை மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நடைமுறைப்படுத்தியிருக்கின்றது. ஒரு காலம் இருந்தது. ஒரு யுகம் இருந்தது. வடக்கில் ஒரு திட்டம் தெற்கில் ஒரு திட்டம் என்று. இன்று அவ்வாறல்ல. நாடளாவிய ரீதியிலே ஒரேநாளில்இ ஒரே நேரத்தில்இ ஒரே திசையைப் பார்த்து 336 பிரதேச செயலகத்திலும் திவிநெகும திட்டத்தினைச் செய்யுங்கள். 25 அரச அதிபர்களின் அலுவலகத்திலும்இ 16இ600 கிராம சேவகர் அலுவலகங்களிலும் இவ்வாறான திவிநெகும திட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் என்றும் இவ்வாறான சட்டங்களையும்இ திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் ஒரு நல்ல அரசாக மஹிந்த ராஜபக்ஷ அரசு செயற்படுகின்றது.
நன்றியுள்ள ஒரு சமூகமாகஇ நன்றியுள்ள அரச ஊழியர்களாக நன்றியுணர்வுடன் செயற்படவேண்டும் என்று நான் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். அரச ஊழியர்களுக்கு பாரியதொரு பொறுப்பு இருக்கின்றது. மக்களுக்கான பணிகளை ஆற்றுகின்றபொழுது மக்களுடைய தேவைகளை நாங்கள் கௌரவமாக மதித்து செயற்படும் ஒரு அரச ஊழியர்களாக நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மக்களுடைய பணத்தில்தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கின்றது. இவ்வாறான மோட்டார் சைக்கிள் போன்ற பல திட்டங்களும் மக்களுடைய பணத்தில்தான் செயற்படுத்தப்படுகின்றது. மக்களுடைய பணத்தினால் தான் நாங்கள் வாழ்கின்றோம் என்ற உணர்வோடும்இ மக்களுக்கு பணியாற்றுகின்ற நல்ல நேர்மையான உணர்வோடும் நாங்கள் செயற்படவேண்டுமென்று வேண்டிக்கொண்டு இந்த நிகழ்வு சிறப்பாக அமைய இறைவனைப் பிரார்த்தித்து விடைபெறுகின்றேன் நன்றி.

SHARE