நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை டப்பிங் பணியில் இருக்கும்போது மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது.
நீண்ட காலமாக சினிமாவில் இவர் பயணித்து வந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் தான் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் சமீபத்தில் பெற்று தந்தது.
எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடித்ததற்காக சன் குடும்பம் விருது விழாவில், சிறந்த வில்லன் என்ற விருதை கைப்பற்றினார்.
ஆனால், முழுமையாக வளர்ந்து வருவதற்குள் அவருக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என ரசிகர்கள் வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
பிரபலங்கள் இரங்கல்
இந்நிலையில், திரையுலகை சேர்ந்த ராதிகா, சாந்தனு, பிரசன்னா, தயாரிப்பாளர் தனஞ்சயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.