மீண்டெழுந்த மேற்கிந்திய தீவுகள்! பட்டையை கிளப்பிய இருவர்

154

 

11வது போட்டியில் விளையாடிய ப்ரூக்ஸிற்கு இது முதல் அரைசதம் ஆகும்28வது போட்டியில் விளையாடிய பிரண்டன் கிங்கிற்கு இது 5வது அரைசதம் ஆகும்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜமைக்காவில் நியூசிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட்டுகளையும், அகியெல் ஹூசேன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர் பிரண்டன் கிங் அதிரடியில் மிரட்டினார்.

அவருடன் ப்ரூக்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 102 ஓட்டங்கள் எடுத்தது. கிங் 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.

அவரது விக்கெட்டுக்கு பின் வந்த டேவோன் தாமஸ் 5 ஓட்டங்களில் வெளியேறினார். கேப்டன் போவெல் அதிரடியாக 15 பந்துகளில் 27 ஓட்டங்களும், ப்ரூக்ஸ் 59 பந்துகளில் 56 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

SHARE