முகம் இளமையாக தோன்ற இதை செய்து பாருங்கள்

208

பாசிப்பருப்பு வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும்.

மேலும் முகம் பளபளப்பாக மாறும். எண்ணெய் நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம். இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம்

இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும். பாதாம் பருப்பு பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசைப் போலச் செய்யவேண்டும். அந்த பசையை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்பு தண்ணீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

கேரட் சாறு சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்

SHARE