வடக்கின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் நேற்று (17) மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார பதில் அமைச்சர் குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனின் கடந்த வாரம் லண்டன் சென்றுள்ள காரணத்தினால் தற்போதைய பதில் முதலமைச்சராக குருகுலராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் முதல்வர் விக்னேஸ்வரனின் அமைச்சுப் பதவிகள் அனைத்தும் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணி மற்றும் வீதி அபிவிருத்தி, வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோக பதில் அமைச்சராக ஐங்கரநேசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.