முஸ்லீம் மார்க்கத்திற்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகின்றபொழுது அதனை தட்டிக்கேட்க துப்பில்லாத எந்தவொரு முஸ்லீம் அரசியல்வாதியும் முஸ்லீம்ஆக இருக்கமாட்டான்

318

 

முஸ்லீம் மார்க்கத்திற்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள வன்முறைகள் தொடர்பில் அதனைக் கண்டும், கேட்டும, உணர்வடைந்தும், இந்த அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று கண்மூடிக்கொண்டிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளும், மக்களும் அல்லாஹ் கூறியதைப்போன்று முஸ்லீமாக இருக்கமாட்டான் பதிலாக சைத்தானாகவே இருப்பான்.

bodu-bala-sena-78-600x337  IMG_8722 Mannar-Palasana02 pikku-007

அந்தவகையில் ரிசாட் பதியுதின், ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற மற்றும் மாகாணசபையின் உறுப்பினர்கள் பலர் அரசிலிருந்து விலகிக்கொண்டமையானது வரவேற்கத்தக்கது. இன்னும் ஒரு சிலர் எமது மார்க்கத்தினை காட்டிக்கொடுப்பதற்காகவும், பள்ளிவாசல்களை உடைப்பதற்காகவும் அரசுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கும் பொதுபலசேனாவை ஆதரிப்பதாகவே இவ்விடயம் அமையப்பெறுகிறது. இதுவரை முஸ்லீம் இனத்திற்கெதிராக பொதுபலசேனா மேற்கொண்ட கொடூரங்களை நினைத்துப்பார்க்கும்பொழுது எந்தவொரு முஸ்லீம் இனத்தவரும் அரசினை ஆதரிக்கமாட்டார்கள். மைத்திரியின் வெற்றிக்குப்பின்னர் எஞ்சியிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் ஒருகுடையின் கீழ் அணிசேர்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

SHARE