மொத்தமாக கைப்பற்றிவிட்டோம்: ரஷ்யா முக்கிய அறிவிப்பு

108

 

உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பில் 86 நாட்களுக்கு பின்னர் ரஷ்யா முதல் வெற்றியை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள மரியுபோல் நகரில் 20,000 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

துறைமுக நகரமான மரியுபோல் கைப்பற்றப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் உக்ரைன் தரப்பில் இருந்து இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

இதனிடையே, உக்ரேனிய வீரர்கள் 2,439 பேர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளதாக அந்த நாட்டின் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக இறுதிவரையில் போராடிய உக்ரைன் வீரர்கள் மீது போர் குற்ற நடவடிக்கைகள் மூனெடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உக்ரைன் வீரர்களை நாஜிகள் மற்றும் குற்றவாளிகள் என்றே ரஷ்ய தரப்பு குறிப்பிட்டுள்ளது. மூன்றே நாளில் உக்ரைன் தலைநகரை கைற்ற களமிறங்கிய ரஷ்ய படைகளுக்கு 86 நாட்களுக்கு பின்னர் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE