யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் உயிரிழப்பு

152

யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அமினிஓடிக் திரவம் குருதியில் கலந்ததால் அவர் உயரிழந்ததாக சட்ட வைத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.

தீவகம் வேலணையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்தார்.

கர்ப்பிணித் தாய் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில். அவர் பிற்பகல் 3 மணியளவில் இரண்டு ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த நிலையில் தாயார் மாலை 4 மணியளவில் உயிரிழந்துள்ளார் என சட்ட வைத்திய விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.

தாயாரின் அமினி ஓடிக் திரவம் (பன்னீர்க்குடம்) குருதியில் கலந்துகொண்டதால் இறப்பு ஏற்பட்டது என்று சட்ட வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்த தாயாரின் இட்டைக் குழந்தைகள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

SHARE