யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்

363

 

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்

modi cm meet f9185565

 

இலங்கையிலுள்ள நிர்வாக முறமைகள் ஊடாக உரிமைகளைப் பெற்றுக்கொள்வேன் எனக் கூறி தனது ஓய்வுக் காலத்தில் அரசியலுக்குள் நுளைந்த சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றினார். புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தமையால் சுதந்திரமாக அரசியல் செய்ய முடியாமல் இருந்ததாக கூறியே வட மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்ற சீ.வி.விக்னேஸ்வரன் இப்போது 13 வது திருத்தச்சட்ட மட்டும் தமிழர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது என்றும், வட கிழக்குத் தமிழர்களின் விருப்பை அறிந்துகொள்ளாமல் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

30 வருட ஒற்றைப் பரிமாண சிந்தனையிலும் அதிகார வர்க்கம் சார்ந்த அரசியலுக்குள்ளும் மூழ்கியிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியலில் விக்னேஸ்வரனின் புதிய முகம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13 வது திருத்தச்சட்டம் அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

உலகின் வாழும் அவமானங்களில் ஒன்றான இனக்கொலையாளி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அதித அக்கறை அழிவுக்கான முகவுரையா என்பதும் கேள்விக்குரியது.

SHARE