யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

209

625-590-560-350-160-300-053-800-944-160-90

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள்.

கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு, அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேளையில் குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4

 

 

SHARE