யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

72

 

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் வாரத்திலிருந்து பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

நெருக்கடி நிலைமை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்த்தல்
எரிபொருள் பங்கீட்டு அட்டை அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அந்தந்த திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிகழும் நெருக்கடி நிலைமை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவே குறித்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிக நெருக்கடி காரணமாக வரிசையில் நிற்கும் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் வழங்க முடியாமையினால் , மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முரண்பாடுகளில் ஈடுபடுகின்றமையும் , எரிபொருள் தாங்கிகளை திறந்து காட்டுமாறு வன்முறைகளில் ஈடுபடுகின்றமையும் அவதானிக்க கூடியதாக உள்ளது .

அந்த வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும் விசேட உத்தரவு ஓன்று பிறப்பிக்கபட்டுள்ளது

காவல்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரைஎரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்பட்டதும் நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளைத் திறக்குமாறு வரிசையில் காத்திருக்கும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என காவல்துறை தலைமையகம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.

எரிபொருள் தாங்கிகளை திறப்பது காவல்துறையினரின் கடமையல்ல, அதிகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளை திறக்க முடியும்.

காவல்துறையினர் தலையிட்டு, இவ்வாறு எரிபொருள் தொட்டிகளை திறக்க முயன்றால், நாசகாரர்களாலோ அல்லது விபத்தாலோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறையினரே பொறுப்பேற்க வேண்டும்.

எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை திறக்குமாறு, பெட்ரோல் நிலையங்களில் பணியில் இருக்கும் காவலர்களை வற்புறுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE