ரூ. 48 கோடிக்கு பெரிய வீடு வாங்கிய பிரபல நாயகி

100

 

பிரபலங்கள் வீடு, கார் என எது வாங்கினாலும் அது மக்களிடம் வைரலாக பேசப்படும். அப்படி தான் சமீபத்தில் நடிகர் அஜித் லண்டனில் ரூ. 100 கோடி மதிப்பில் ஒரு புதிய வீடு வாங்கியிருந்ததாக செய்திகள் வந்தன.

அதனை ரசிகர்களும் பரபரப்பாக பேசி வந்தார்கள். இப்போது இன்னொரு பிரபலம் வீடு வாங்கிய செய்தி வெளியாகியுள்ளது. அதுவேறு யாரும் இல்லை பாலிவுட் சினிமாவில் 90களில் டாப் நாயகியாக இருந்த மாதுரி தீட்ஷித் தான்.

இவர் மும்பையில் ரூ. 48 கோடி மதிப்பிலான பெரிய வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

வீட்டை பற்றிய தகவல்
முன்னதாக ரூ. 12.5 லட்சத்துக்கு சொகுசு வீடு ஒன்றில் 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் வசித்து வந்த நடிகை இப்போது தெற்கு மும்பையின் வோர்லியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு வாங்கியுள்ளாராம்.

இந்த அபார்ட்மென்ட்டில் பெரிய நீச்சல் குளங்கள், கால்பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, கிளப் மற்றும் பல வசதிகளை அடங்கியுள்ளது. இந்த வீட்டில் இருந்து பார்த்தாலே அரபிக்கடலின் அழகும், ஒட்டுமொத்த மும்பையும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE