வங்காளதேசத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்வெட்டு

119

 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

வங்காளதேசத்தின் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

130 மில்லியன் (13 கோடி) மக்கள், இன்று பிற்பகல் வேளையில் மின்சாரம் இல்லாமல் இருந்ததாக மின்சார வரியம் கூறியது.

மின்சார மேம்பாட்டு வாரியத்தின் கூற்று

உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு பிறகு, நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் திடீர் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்குள்ள மக்களிடையே பெரும் அதிருப்தி காணப்படுகிறது.

இதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என அதிகாரிகள் கூறினர். 22 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தலைநகர் டாக்காவில் இரவு 8 மணிக்குள் மின்சாரம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இன்னும் பரவலான மின்விநியோகம் சீராகவில்லை என தெரிகிறது. வங்காளதேசத்தில் கடைசியாக நவம்பர் 2014 ஆண்டு மிகப்பெரிய மின்தடை ஏற்பட்டது.

அப்போது நாட்டின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பாதிக்கப்பட்டது. அப்போது சுமார் 10 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

SHARE