வெளியேறியது ஜெர்மனி

110

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஜெர்மனி, கோஸ்டா ரிகா அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

70-வது நிமிடத்தில் மானுவல் நியூர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது. போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்ததால் தொடரில் இருந்து ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறின.

SHARE