வைரலாகும் கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமண புகைப்படங்கள்

110

நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் இருவரும் தங்கள் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் இருவருக்கும் நவம்பர் 28-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்

இதையடுத்து கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் கடந்த நவம்பர் 28-ஆம் தேதி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

SHARE