ஸ்மார்ட் போன் குறித்து பலருக்கும் தெரியாத ரகசியங்கள்!

348

 

நம் வாழ்வோடு இணைந்துவிட்ட பொருளாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன் என கூறினால் அது மிகையாகாது!

மொபைல் போன்கள் வெளிவந்து பல ஆண்டுகளாகின்றன, எனவே அவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று தோன்றினாலும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் இன்னும் உள்ளன.

முதல் அழைப்பு

நியூயார்க்கின் ஒரு தெருவிலிருந்து ஒரு மொபைல் தொலைபேசியிலிருந்து மோட்டோரோலாவின் பொறியாளர் மார்ட்டின் கூப்பர் முதல் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் இந்த துறையில் தனது மிகப்பெரிய போட்டியாளரான AT&T இன் பொறியியலாளர் ஜோயல் ஏங்கல் என்பவருக்கே முதல் அழைப்பை தான் செய்ததாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

முதல் ஸ்மார்ட் போன்

எரிக்சன் ஜி.எஸ். 88 “பெனிலோப்” மொடல் தான் இன்றைய காலத்தில் எல்லோராலும் சொல்லப்படும் மிகப் பிரபலமான பெயரான “ஸ்மார்ட்போன்” என அழைக்கப்பட்ட முதல் மொபைல் போன் ஆகும்.

தினமும் ஸ்மார்ட் போன்

சராசரியாக ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கு ஒரு தடவை நாம் செல்போன்களை சரிபார்க்கிறோம் என்று கூறப்படுகிறது. இது தான் நோமோபோபியா ஆகும்.

நோமோபோபியா

சுமார் 200,000 மில்லியன் மக்கள் இந்த நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தமது மொபைல் போனில்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியேற பயப்படுகிறார்கள். மற்றொரு வார்த்தை, “ரிங்சைட்டி” (Ringxiety) என்றழைக்கப்படுகிறது. இது போனின் அழைப்பு மணி ஒலிக்கவிட்டாலும் அது ஒலிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

SHARE