ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களின் விஷேட கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுமா?

224

ob_b8a38b_730x400

ஆளும் கட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இன்று (18) விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள, கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 7.00 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சி எதிர்நோக்கி வரும் சவால்கள் மற்றும் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் ஆகியன குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் பற்றியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்கால நிலைப்பாடு பற்றியும் கலந்துரையாடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE