13வது அரசியலமைப்பு திருத்தத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்ற இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு பேச்சாளர் செய்ட் அக்பருதீன் புதுடில்லியில் நேற்று கருத்து வெளியிடுகையில், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஏற்கனவே உறுதியளித்தது. அது தொடர்பில் மீண்டும் உறுதிமொழியை வழங்கியுள்ளது.
எனவே இலங்கை எந்த தீர்மானத்தை எடுத்தாலும் 13வது திருத்தம் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ் 13வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அதனை முழுமையாக உறுதிப்படுத்த இலங்கை உறுதியளித்துள்ளதாக அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
TPN NEWS