வடக்கில் 4 லட்சம் வாக்குகளை வைத்து கொண்டு தேர்தல் முறையில் பேரம் பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளர்.
அனுராதபுரம் பாலகல பிரதேசத்தல் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேசத்தின் சவால்களுக்கு மத்தியில் நாடு முன்னோக்கி செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் அரசியலில் பயந்த சுபாவமுடைய ஒருவரை ஜனாதிபதி பதவியில் அமர்த்தி நாட்டை மீண்டும் பின்னோக்கி இழுப்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேவையாக உள்ளது.
இனவாத சக்திகளை பிரநிதித்துவப்படுத்தும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தாத எவராக இருந்தாலும் இந்த தேசத்துரோக செயலுக்கு ஆதரவு வழங்கி, சர்வதேச சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை நிறைவேற்ற உந்துசக்தியை கொடுக்க முன்வந்தார்கள் என்றால் அதனை விட அரசியல் காட்டிக்கொடுப்பு நாட்டில் வேறு எதுவுமில்லை.
ருத்ரகுமார், அருட் தந்தை இம்மானுவேல் ஆகியோருக்கு நாட்டில் பொம்மையான நிர்வாகத்தை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் பிரிக்கும் தேவையே உள்ளது எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
– See more at: http://www.tamilwin.net/show-RUmszARbKXlo0.html#sthash.qfHq0KMu.dpuf