கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

162

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே இந்த மனு ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி அறிவித்தது.

இந்நிலையில் அவரை விடுவிக்கக் கோரி ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஞானசார தேரரை விடுவிக்கக்கோரி பல்வேறு போராட்டங்களை பௌத்த அமைப்புக்கள் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE