கல்லீரலை சுத்தம் செய்யும் நெல்லிக்காய்

566

மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிக்கின்றது.

கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

ஆகவே இதனை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். கல்லீரல் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான், உடலில் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

அந்தவகையில் வேகமாக சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத ஜூஸ் பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • நெல்லிக்காய் – 4
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை

மலை நெல்லிக்காயை வெட்டி துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்து, தேவையான அளவு நீர் மற்றும் தேன் சேர்த்து கலந்து கொண்டால், ஜூஸ் தயார்.

இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி 10 நாட்கள் குடித்து வந்தால், கல்லீரல் முழுமையாக சுத்தமாகிவிடும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இந்த வைட்டமின் சி சத்து, கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் கழிவுப் பொருட்களை முற்றிலும் வெளியேற்றி, ஓர் பாதுகாப்பு படலத்தை உருவாக்கும்.

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கல்லீரலை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் செல்களுக்கு ஊட்டமளித்து, கல்லீரலைத் தாக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.

 

SHARE