நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் ரோல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடித்த மாரி 2, என்ஜிகே போன்ற பல படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சாய் பல்லவிக்கு தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது சாய் பல்லவி நடித்து வரும் VirataParvam என்ற படத்திற்காக சாய் பல்லவி பொது இடத்தில் ரகசியமாக ஷூட் செய்துள்ளார். சாதாரண உடையில் அவர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்துள்ளார். அதை படக்குழுவினர் ரகசியமாகி கேமரா வைத்து படம் பிடித்துள்ளனர்.
சாய் பல்லவியை பொது மக்கள் யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.