தமிழ் சினிமாவின் பிரபலங்களின் தாயார் காலமானார்.

127
நகுல்-தேவயானியின் தாயார் காலமானார்

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை தேவயானி. திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், அவ்வப்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருடைய சகோதரர் நகுல், ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகினார். தற்போது தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தேவயானி, நகுல் ஆகியோர்களின் தாயாரான லஷ்மி ஜெய்தேவ் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்.
தாயாருடன் நகுல் தாயாரை இழந்து சோகத்தில் இருக்கும் தேவயானி, நகுல் குடும்பதிற்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு தான் நகுல், தேவையானியின் தந்தை காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE