விண்ணை முட்டும் அளவுக்கு வீட்டு வாடகை; படுக்கையை வாடகைக்கு விட்ட இளம்பெண்!

126

 

கனடாவின் டொராண்டோ பகுதியில் வீட்டு வாடகை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அன்யா எட்டிங்கர் என்ற பெண் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் செய்தார்.

நிபந்தனை
அதில் அவர் தனது படுக்கையை பகிர்ந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு பெட் மேட் தேவை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரத்தில் தன்னுடைய படுக்கையை பகிர்ந்து கொள்ளும் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எனவும் அவர் ஒரு வருடம் தன்னுடன் இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.

மேலும் வாடகை கட்டணமாக 900 கனடா டாலர்கள் நிர்ணயித்துள்ளார். அவரது இந்த விளம்பரம் பயனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE