தமக்கு இரட்டை குடியுரிமை கிடையாது – புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக்க

124

 

இரட்டை குடியுரிமை கிடையாது என புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நயன வாசலதிலக்க தெரிவித்துள்ளார்.

தாம் ஒர் இலங்கைப் பிரஜை எனவும், தனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாத்திரம் அவுஸ்திரேலிய வதிவிட வீசா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது மனைவியும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவியும் உறவினர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல்
இருப்பினும், உறவுமுறையின் அடிப்படையில் அரசியலுக்கு வரவில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தாம் நிச்சயமாக போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திடீரென பதவி கிடைக்கப் பெற்ற காரணத்தினால் எதனையும் திட்டமிடவில்லை எனவும், நாட்டுக்கும், கட்சிக்கும் சேவைகளை வழங்க திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஒன்பது கோடி ரூபா பணத்தை சமிந்த விஜேசிறிக்கு வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE