வீமன் காமம் வடக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்ட படைமுகாமில் நிரந்தரமாக கட்டப்பட்டிருந்த உயர்பாதுகாப்பு வலையத்தின் வரைபடத்தின் ஊடாகவே இவ்விடம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இராணுவ உயர்பாதுகாப்பு வலையமாக இருந்த வலி.வடக்குப் பகுதியில் இருந்து 468.5 ஏக்கர் நிலம் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29 ஆம் திகதி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் வீமன் காமம் வடக்குப் பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பினை உள்ளடக்கிய இராணுவத்தின் பாரிய படைமுகாம் ஒன்றும் விடுவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட படைமுகாமிற்குள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வலி.வடக்கு பகுதியில் வரைபடம் பெரிய சீமெந்து தரையில் வரையப்பட்டிருந்து.
அதற்கு அருகில் வரைபடத்தின் குறியீடுகளுக்கான பொருளும் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது.
“மப் கீ” என்ற தலைப்பில் வரையப்பட்டிருந்த வரைபடத்தில் உயர்பாதுகாப்புவலைய எல்லை, பாதுகாக்கப்பட்ட வலையம், வண்டி ரோட், ஒற்றையடிப்பாதை, நீல் நலை, மணல் தரை, வயல் (நெல்), வேறு வயல், தோட்டம், பற்றை காடு, காடு, கோவில், பாடசாலை என்பவை குறிப்பிடப்பட்டள்ளது.
இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருவதை காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு நடைபெறும் விவசாய செய்கைகளுக்கு செல்லும் வழிகள், ஏனைய படைமுகாங்களுக்க செல்லும் பாதைகள் என்பவையும் அவ்வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
குறித்த வரைபடத்தில் விவசாய நிலங்கள் மற்றும் படைமுகாங்களுக்கு செல்லும் வழிகளைத் தவிர வேறு எவையும் பெரிதாக குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கவில்லை.
இதனால் பெரும் தொகையான ஏக்கர் நிலப்பரப்பினை உள்ளடக்கியதாக காணப்பட்ட இப்படைமுகாமில் பயிட்சி முகாமும் இருந்தது. ஏனவே அதிகளவான இராணுவத்தினர் அம் முகாமில் நிலை கொண்டிருந்துள்ளனர்.
மேலும் குறித்த முகாமின் நான்கு பக்கங்களிலும் வாகனங்கள் சென்று வருவதற்கான பாதைகளும் செப்பனிடப்பட்டிருந்தது. இதனால் விவசாய நடவடிக்கைகளுக்கான ஆளணிகள் இம் முகாமில் இருந்து வழங்கப்பட்டிருந்திருக்கலாம்.
இதனாலேயே குறித்த படைமுகாமில் பாரிய அளவில் வரைபடம் நிரந்தரமான சீமெந்து, வர்ணங்கள் கொண்டு வரையப்பட்டிருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.